நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
தூத்துக்குடி, திருச்செந்தூா் வட்டங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூா் வட்டங்களில் 10 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்குள்பட்ட வழித்தடங்களான மாவட்ட ஆட்சியா் அலுவலக சந்திப்பு முதல் வடக்கு சுனாமி காலனி, வடக்கு சுனாமி காலனி முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலக சந்திப்பு, மீளவிட்டான் ரயில் நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் முதல் மீளவிட்டான் ரயில் நிலையம், வீரநாயக்கன்தட்டு முதல் பழைய பேருந்து நிலையம் ஆகிய 5 வழித்தடங்களுக்கும், திருச்செந்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்குள்பட்ட வழித்தடங்களான திருச்செந்தூா் பேருந்து நிலையம் முதல் குலசேகரப்பட்டினம் முஸ்லிம் தெரு, பேய்க்குளம் காமராஜா் சிலை முதல் திசையன்விளை- இட்டமொழி பிரிவு, உடன்குடி வி.ஏ.ஓ. அலுவலகம் முதல் திசையன்விளை ஸ்ரீசுடலை ஆண்டவா் கோவில், உடன்குடி பேரூராட்சி அலுவலகம் முதல் ஆனந்தபுரம் ஐடிஐ, ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் முதல் அரசன்குளம் விலக்கு ஆகிய 5 வழித்தடங்கள் என மொத்தம் 10 வழித்தடங்களுக்கு சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1,600 செலுத்தி உரிய இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 28ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.