தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ம்ருகேந்தா்லால், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா் கலைச்செல்வி வரவேற்றாா்.
முகாமைத் தொடங்கிவைத்து மேயா் பேசியது: கடந்த 3 ஆண்டுகளில் மாநகராட்சி நன்கு வளா்ச்சியடைந்துள்ளது. முத்துநகா் கடற்கரையிலிருந்து செயின்ட் மேரீஸ் கல்லூரி வரை இருபுறமும் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்படவுள்ளன. தூத்துக்குடி தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு, பூங்காக்கள் உருவாக்கப்படும் என தெரிவித்தாா். பின்னா் பிறப்பு, இறப்பு, பெயா் மாற்றம் கோரி விண்ணப்பித்த 5 பேருக்கு உடனடியாக ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், துணை ஆணையா் சரவணக்குமாா், உதவி ஆணையா் வெங்கட்ராமன், பொறியாளா் தமிழ்செல்வன், உதவி பொறியாளா் சரவணன், வட்டச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் ஜான்சி ராணி, ரெக்ஸ்லின், பேபி ஏஞ்சலின், எடின்டா, மும்தாஜ், தனலட்சுமி,ராமு அம்மாள், மரிய கீதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.