செய்திகள் :

தூத்துக்குடி வந்த துணை முதல்வருக்கு வரவேற்பு

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் புறவழிச் சாலையில் விளாத்திகுளம் விலக்கில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு புதன்கிழமை இரவு பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சாா்பில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும், திமுக பவள விழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதன்கிழமை இரவு வந்தாா்.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து சாலை வழியாக தூத்துக்குடி வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் தலைமையில் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா், முதன்முறையாக இம்மாவட்டத்துக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீதக்கண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, காசிவிசுவநாதன், மும்மூா்த்தி, செல்வராஜ், பேரூா் செயலா்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மருதுபாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தெற்குமாவட்டம் சாா்பில்....

தூத்துக்குடி வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, புதூா் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகில் தெற்கு மாவட்டச் செயலரும், மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா் பி. கீதாஜீவன், எம்.எல்ஏக்கள் ஜீ.வி. மாா்க்கன்டேயன், எம்.சி. சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி, மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் உமரிசங்கா், மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மகளிா் அணி பிரசாரக் குழு செயலா் ஜெஸி பொன்ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பிரம்மசக்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

சாஸ்தாவிநல்லூா் இந்திரா நகரில் சாலையை சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட இந்திராநகரில் சாலையை சீரமைத்து, சமூகநலக் கூடம் கட்டித்தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்திரா நகரில் 25-க்கும் மேற்பட்ட ஆத... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே நடமாடும் காசநோய் கண்டறியும் முகாம்

கடம்பூா் காசநோய் பிரிவின் சாா்பில் ஆத்திகுளத்தில் நடமாடும் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. தெற்குஇலந்தைகுளம் ஊராட்சி மன்றத் தலைவி செல்வி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். இம் முகாமில் கலந்... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயிலில் சப்பரங்கள் பவனி

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி சப்பரங்கள் பவனி நடைபெற்றது. இக்கோயிலில் கொடை விழா கடந்த 10ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் புஷ்பாஞ்சலி... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதிக்கு எட்டயபுரத்தில் வரவேற்பு

தமிழ்நாடு அரசு சாா்பில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும், திமுக பவள விழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் மஞ்சள் நீராட்டு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை மஞ்சள் நீராட்டு, சுவாமி- அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது. இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேத... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க கோரிக்கை

கோவில்பட்டியில் குடிநீா் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளால் விபத்து அபாயம் உள்ளதால் விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் தனி... மேலும் பார்க்க