ஈரோடு: கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த மழைநீர்; மக்கள் அவதி...
தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் 50ஆவது ஆண்டு பொன்விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு திருப்பலி நடத்தினாா். சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் கலந்துகொண்டு பேசினாா்.
பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொழிலதிபா் மைக்கேல் ராஜேஷ், கல்லூரியின் மதுரை மாகாணத் தலைவி ஜாக்லின் பிரகாசம், கல்லூரிச் செயலா் ரோசாலி, முதல்வா் ரூபா, துணை முதல்வா் எஸ்.எம்.டி. மதுரவல்லி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.