தூத்துக்குடி: T.சவேரியார்புரத்தில் தேங்கும் குப்பைகள்... சுகாதார பாதிப்புகளைத் தடுக்குமா மாநகராட்சி?
தூத்துக்குடி மாவட்டம், T. சவேரியார்புரம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் அமைந்திருக்கிறது. அதன் பின்புறம் பிரதான சாலைக்கு அருகே குடியிருப்புகளையொட்டி ஆங்காங்கே குவிந்து கிடைக்கும் குப்பைகளால் அந்த இடமே மினி குப்பைக் கிடங்காகக் காட்சியளிக்கிறது. இந்தக் குப்பைகளை முறையே சேகரித்து அப்புறப்படுத்துவதற்கேற்ற வகையில் தெருவில் எங்கும் குப்பைத் தொட்டிகள் அமைக்கவில்லையென்பதாலும், வாரத்துக்கு ஒருமுறையாவது குப்பைகளைச் சேகரிக்க மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லையென்பதாலும்தான் குப்பைகள் இந்த அளவுக்குத் தேங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றி வருகின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அங்கு வசிப்போர்க்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்துடன், இந்தக் குப்பைகளில் மேயும் கால்நடைகளுக்கும் பல தொற்றுநோய்கள் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. இதனால், குப்பைகளை முறையாக அகற்ற வலியுறுத்தி வரும் இப்பகுதி மக்கள், மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்று எதிர்க்கப்பார்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...