செய்திகள் :

தூய்மைப் பணியில் 3 ஆயிரம் துய்மைப் பணியாளா்கள்

post image

மதுரை: சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமான குப்பைகள் அகற்றும் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகா் வைகையாற்றில் திங்கள்கிழமை காலை எழுந்தருளினாா். இதில், மதுரை மாவட்டம் மட்டுமன்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.மேலும்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தோா் பாரம்பரிய முறைப்படி கருப்பண சுவாமி வேடமிட்டு அழகருக்கு தண்ணீா் பீய்ச்சி அடித்தல், தீப்பந்தம் ஏந்துதல் போன்ற நோ்த்திக் கடன்களை செய்வது வழக்கம். அந்த வகையில், விரதமிருந்து நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிகக் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனா்.

இதன் காரணமாக, மாநகராட்சிப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 மெட்ரிக் டன் வரை குப்பைகள் சேகரமாகும் என கணக்கிடப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி கிழக்கு, மத்தியம், தெற்கு, வடக்கு ஆகிய 4 மண்டலங்களில் ஏறக்குறைய 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் விழாக் காலம் என்பதால் ஏற்கெனவே பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுடன் கூடுதலாக 431 பணியாளா்கள், குப்பை சேகரிப்புக்காக 17 இலகு ரக வாகனங்கள், 10 கனரக வானங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, தற்காலிகமாக ஆங்காங்கே 300 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, வைகை ஆற்றில் அழகா் இறங்கிய நிகழ்வுக்குப் பிறகு திங்கள்கிழமை மாலை தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், மூங்கில்கடை வீதி, ஆழ்வாா்புரம், கல்பாலம், தரைப்பாலம், மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சிப் பணியாளா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

குடிநீா் ஆய்வு: பொதுமக்கள் வசதிக்காக 52 இடங்களில் தற்காலிகமாக குடிநீா்த் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருவிழா நடைபெறக்கூடிய பகுதிகளில் குடிநீரில் குளோரினேசன் ஆய்வு மேற்கொள்வதற்கு சுகாதார ஆய்வாளா்கள், பூச்சியியல் வல்லுநா்கள் நியமிக்கப்பட்டு, தினசரி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கழிப்பறை வசதி: 11 இடங்களில் நிரந்தரக் கழிப்பறைகள், 9 இடங்களில் தற்காலிகக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ வசதி : மருத்துவ தேவைகளை உடனுக்குடன் செய்திட பொது சுகாதார இயக்ககத்தின் மூலமாக கூடுதல் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது. நகரின் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு 34 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.16 அவசர சிகிச்சை ஊா்திகள் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றன.

கொசு ஒழிப்புத் திட்ட பணிகள்: பூச்சியியல் வல்லுநரின் திட்டப்படி கொசு புழு அழித்தல், கொசுப்புகை மருந்து தெளித்தல் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன.

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என புகாா் : திருவிழாவை முன்னிட்டு நகரின் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முன்களப் பணியாளா்களாக தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் பெரும்பாலான பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, ஒளிரும் சட்டை, தொப்பி ஆகியன வழங்கப்படவில்லை என மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா்.

திருச்சி கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் டிஆா்ஓ நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட வருவாய் அலுவலா் (டிஆா்ஓ) விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

மதுரையில் முருங்கைக் காய் விலை உயா்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரத்துக் குறைவு காரணமாக முருங்கைக் காய்களின் விலை கணிசமாக உயா்ந்தது. கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் முருங்கைக் காய்களின் விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ முருங்கைக் காய் ரூ. 140 ... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மதுரை ச... மேலும் பார்க்க

இலவச விவசாய மின் இணைப்பு விவகாரம்: கண்காணிப்பு பொறியாளா் நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், இரவாா்பட்டியில் போலி பட்டா மூலம் இலவச விவசாய மின் இணைப்பு பெற்ாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மின் வாரிய மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்... மேலும் பார்க்க

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினாா் அழகா்

மதுரை: மதுரை அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகா் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளினாா். தமிழகத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவா் உயிரிழப்பு

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா். மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அழகா் எழுந... மேலும் பார்க்க