செய்திகள் :

தென்காசி உள்பட 4 மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்‌ கைது!

post image

தென்காசி உள்பட 4 மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தென்காசி மாவட்ட தனிப்படை போலீஸ் கைது செய்தது. இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன்‌ மூலமாக தொடா்பு கொண்ட மர்மநபா், தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தார். இதைத்தொடா்ந்து போலீஸார், உஷார்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது.

செய்யது அமீர்

இதையடுத்து, போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பொய் என தெரியவந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து விசாரிக்க, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா்.

தொடர்ந்து, தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தியதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், விருதுநகா் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது‌. இதையடுத்து விருதுநகர் மாவட்டம் வந்த தென்காசி தனிப்படையினர், சேத்தூர்‌ அருகே பதுங்கியிருந்த திருச்சி மாவட்டம் வடக்கு காட்டூா் பகுதியை சேர்ந்த செய்யது அமீா் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்" என்றனர்.

அக்னி தீர்த்தம்: `உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா' -குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் சிறை

ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த தனியாருக்கு சொந்தமான டீ கடையுடன் கூடிய உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய ஓ.பி.எஸ்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி(58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக ... மேலும் பார்க்க

சென்னை: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட மூவர் கைது; சிக்கியது எப்படி?

வடசென்னையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், "தன்னுடைய 12 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்... மேலும் பார்க்க

வேங்கை வயல்: ``சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது'' -மூவர் தரப்பில் மனுத்தாக்கல்!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ந... மேலும் பார்க்க

`டாக்டர், அரசு அதிகாரி..!’ - ஆசை வலை வீசி பல ஆண்களுடன் திருமணம்; சமூகவலைதள பதிவால் சிக்கிய பெண்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன் (27). இவர் தனியார் வங்கியில் குழு கடன் வசூல் செய்யும் பணியில் இருக்கிறார். சிவசந்திரனுக்கும், நிஷாந்தி என்பவருக்கும் கடந்த வாரம் முறைப்படி ... மேலும் பார்க்க

``வேலை இழந்து, திருமணம் ரத்தாகி..." -சைஃப் அலிகான் தாக்குதலில் சந்தேகத்தில் கைதானவர் வேதனை..

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த மாதம் அவரது வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். அவரை தாக்கியதாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகு சைஃப் அலிகானை தாக்கிய நப... மேலும் பார்க்க