செய்திகள் :

தென்காசி: "வனத்துறை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" - விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

post image

தென்காசி மாவட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் லாவண்யா பால் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் தங்களது பிரதான பிரச்சனையான வன விலங்குகள் அட்டகாசத்தைக் கேட்பதற்கு வனத்துறை அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தொடர்பு கொண்ட நிலையில் வனத்துறை சார்பாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற போது, "கடந்த சில மாதங்களாகவே வடகரை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுகிறது. தென்னை உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன.

ஆனால் இதுகுறித்து வனத்துறையினர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. முறையான அகழிகள் வெட்டப்படவில்லை, சோலார் மின் வேலிகள் அமைக்கப்படவில்லை. இதனைக் கேட்கும் பட்சத்தில் தங்களுக்கான நிதி வரவில்லை எனக் கூறுகின்றனர்" என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

"தங்கள் பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்துகின்ற வகையிலும் முதற்கட்டமாக செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வனச்சரகத்தின் மீது குற்றப்புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கான நிதி இதுவரை வந்துள்ளதா? வந்த நிதியை என்ன செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என கோரிக்கை மனு அளித்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Youtube: யூடியூப் சேனல்களுக்கும் லைசென்ஸ் அவசியம்; கர்நாடக அரசின் திட்டமும், தர்மஸ்தலா பின்னணியும்?

கர்நாடக மின்னணு ஊடகப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, டிவி சேனல்களைப் போலவே யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து உரிமம் பெற்றே செயல்பட அனுமதிக்கும் முறையைக் கொண்டுவர கர்நாடக அரசு ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி: "இபிஎஸ்-ஐ கலந்தாலோசிக்காமல், எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது" - ஹெச்.ராஜா பேட்டி

"தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகிவிட்டாரே?" "தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்-ஸும், டி.டி.வி.தினகரனும் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது. மக்கள் விரோத... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன் - ஜக்தீப் தன்கர் பங்கேற்பு; ராகுல் காந்தி ஆப்சன்ட்

துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நட... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்கு ஆதரவா?

துணை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் ... மேலும் பார்க்க

``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எடப்பாடி குற்றச்சாட்டு

திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் தொகுதிகளில் சுற்றுப் பய... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கடும் மழையிலும் போக்குவரத்தை சீர்செய்த காவலர்கள்; நெகிழ்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்!

திண்டுக்கல்லில் கடந்த மாதம் முழுவதுமே கடுமையான வெயில் சுட்டெரித்தது. கடுமையான வெயிலுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நகர் முழுவதுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக... மேலும் பார்க்க