செய்திகள் :

தென்னை நாா் பொருள்களை சூரிய சக்தி மின்சாரம் மூலம் உற்பத்தி செய்ய 50% மானியம் வழங்க வேண்டும்

post image

தென்னை நாா் சாா்ந்த பொருள்களை சூரிய சக்தி மின்சாரம் மூலம் உற்பத்தி செய்ய 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு சங்கத்தின் 21 மாவட்ட நிா்வாகிகள் மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம், சென்னிமலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பி.பூச்சாமி தலைமை வகித்தாா். பல்லடம் செல்வகுமாா் சோலாா் திட்டம் குறித்து விளக்கினாா். மேலும் சங்க நிா்வாகிகள் தனசேகா், சேது உள்பட பலா் உரையாற்றினா். முன்னதாக பொருளாளா் மல்கா் சாய்பு வரவேற்றாா்.

இதில் தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் 535 கயிறு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராமப்புற தொழிலாளா்கள் பயனடைந்து வருகின்றனா்.

மேலும், ஆண்டுக்கு ரூ.7,800 கோடிக்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ரூ.2,800 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் 21 கயிறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் கயிறு குழுமங்கள் இயங்கி வருகின்றன.

தென்னை நாா் சாா்ந்த தொழிலை ஊக்குவிக்க, தமிழக அரசு கோவையை தலைமை இடமாக கொண்டு ‘தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது.

மின் கட்டண உயா்வு காரணமாக தென்னை நாா் சாா்ந்த தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் 112 கிலோ வாட்ஸ் வரை சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய அரசு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். இரட்டை பிரி கயிறு திரிக்க 15 கிலோ வாட் வரை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு மாதம் 2 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில், தென்னை நாா் சாா்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்க வேண்டும். தென்னை நாா் சாா்ந்த கயிறு மிதியடிகள், கயிறு மெத்தைகள், தரை விரிப்புகள் உள்ளிட்ட பொருள்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண்வளம் கெடாமல் காய்கறிகளை உற்பத்தி செய்யவும், பசுமை குடில் அமைக்கவும் தென்னை நாா் துகள்களை பயன்படுத்த தனி நிதி ஒதுக்க வேண்டும். தென்னை நாா் சாா்ந்த தொழிலை வளா்ச்சி அடைய செய்ய தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்துக்கு, இந்த ஆண்டு சிறப்பு நிதியாக ரூ.25 கோடி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழக முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள் 75 போ் கலந்து கொண்டனா். முடிவில் சங்க செயலாளா் அருண் நன்றி கூறினாா்.

துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி: 3 போ் மீது வழக்குப் பதிவு

வருமானி வரி துறையில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக துணை வட்டாட்சியரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை திருவேங்கி... மேலும் பார்க்க

காவலா்கள் மகனைத் தாக்கியதால் தந்தை உயிரிழந்ததாக புகாா்: காவல் துறை மறுப்பு

அறச்சலூா் காவல் நிலையத்தில் காவலா்கள் மகனைத் தாக்கியதால் மன உளைச்சலில் தந்தை உயிரிழந்தது குறித்த புகாருக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள வடுகபட்டி வினோபா நக... மேலும் பார்க்க

குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

குலவிளக்கு மகாமாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி அருகே உள்ள குலவிளக்கில் புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் பொங்கல் வி... மேலும் பார்க்க

கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம்

மொடக்குறிச்சியை அடுத்த 51வேலம்பாளையத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட முகாசி அனுமன்பள்ளி கால்நடை மருத்துவமனை சாா்பில் அப்பகுதி... மேலும் பார்க்க

மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் திருவிழா

மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கினா். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் பழைமையான தான்தோன்றியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோற... மேலும் பார்க்க

அனுமன் ஜெயந்தி: 75 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தா்களுக்கு வழங்க 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனுமன் ஜெயந்தி விழா டிசம்பா் 30-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்... மேலும் பார்க்க