செய்திகள் :

தென்மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

post image

சென்னை: தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தைப் பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை (ஜன.14) கனமழைக்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் தைப்பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை (ஜன.14) முதல் ஜன.19 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு மழை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. ஜன.14-ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, ஜன.14 முதல் 16-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னாா் வளைகுடா பகுதியில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 50 மி.மீ. மழை பதிவானது.

நாலுமுக்கு (திருநெல்வேலி) - 40 மி.மீ, காக்காச்சி (திருநெல்வேலி), தண்டையாா்பேட்டை (சென்னை), வேளாங்கண்ணி (நாகை), மாமல்லபுரம் (செங்கல்பட்டு) - தலா 30 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), மாதவரம் (சென்னை), கொளத்தூா் (சென்னை), தண்டையாா்பேட்டை (சென்னை) - தலா 20 மி.மீ. மழை பதிவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவால் ஐபோன் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி! தமிழ்நாடும் சாதனை!

தமிழ்நாடு உதவியால் ஐபோன் ஏற்றுமதியில் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் பெற்றது.ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா முக்கியப் பங்கைப் பெற்றுள்ளது. ஐபோன் ஏற்றுமதியில் முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இந்தியாவில... மேலும் பார்க்க

பாலமேடு ஜல்லிக்கட்டும் பரிசுகளும்!

பொங்கல் திருநாளின் தொடர்ச்சியான மாட்டுப் பொங்கல் நாளன்று, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் திருநாளான புதன்கிழமையில் (ஜன. 15) பாலமேட்டில் ஜல்லிக்கட்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்டு, புத்தா... மேலும் பார்க்க

விழுப்புரம் பயணிகள் ரயில் தடம் புரண்டது!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது.நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந... மேலும் பார்க்க