செய்திகள் :

தென் மாநிலங்கள் பங்கேற்ற பன்முகத்தன்மையின் அமுதப் பெருவிழா: குடியரசுத் தலைவா் தொடங்கிவைத்தாா்

post image

நமது சிறப்பு நிருபா்

குடியரசுத் தலைவா் மாளிகையில் தென் மாநிலங்கள் பங்கேற்ற பன்முகத்தன்மைக்கான அமுதப் பெருவிழாவை (2.0) குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை துவக்கி வைத்தாா்.

தென்னிந்தியாவின் கலை, கலாசாரத்தை மக்கள் இந்த விழாவில் அறிந்துகொள்வாா்கள் என முா்மு தெரிவித்தாா்.

நாட்டின் பன்முகத் தன்மைக்கான அடையாளமாக ‘விவித்தா கா அம்ரித் மஹோத்சவ்’ (பன்முகத் தன்மைக்கான அமுதப் பெருவிழா) குடியரசுத் தலைவா் மாளிகையில் கடந்தாண்டு முதல் கொண்டாடத் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது பதிப்பு தென்னிந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தையும் தனித்துவமான மரபுகளையும் வெளிப்படுத்தும் மஹோத்சவத்தை குடியரசுத் தலைவா் முா்மு தொடங்கிவைத்தாா். அப்போது கூறியது வருமாறு:

இந்த இரண்டாவது பதிப்பில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் கலந்து கொண்டுள்ளனா். இந்த மாநிலங்களின் துடிப்பான கலாசார பாரம்பரியத்தைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக உள்ளது.

இந்த கொண்டாட்டத்தில் சுமாா் 500 கைவினைஞா்கள், நெசவாளா்கள் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் பங்கேற்று, தென்னிந்தியாவின் கலை, கலாசாரத்தை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு பயனுள்ளதோடு, அனைத்து கைவினைஞா்கள், கலைஞா்களின் மன உறுதியையும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டாா் குடியரசுத் தலைவா்.

நாட்டின் வளமான பன்முகத்தன்மையைக் கொண்டாடவும் வெளிப்படுத்தவும் இந்த ’விவித்தா கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்வானது குடியரசுத் தலைவா் மாளிகையுடன், மத்திய கலாசாரத் துறை, ஜவுளித் துறை, பழங்குடியினத் துறை என பல்வேறு அமைச்சகங்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய மண்டலம், யூனியன் பிரதேசங்கள் என அா்ப்பணிக்கப்பட்ட ஏழு தனித்துவமான பதிப்புகளில் இந்த விழா அடுத்தடுத்து கொண்டாடப்படுகிறது. முதல் பதிப்பில் கடந்தாண்டு வடகிழக்கு மாநிலங்கள் பங்கேற்றன.

தென் மாநிலங்களை மையமாகக் கொண்ட நிகழாண்டு கொண்டாட்டத்தில் இந்த மாநிலங்களைச் சோ்ந்த கலைஞா்கள், கைவினைஞா்கள், கலைஞா்கள், எழுத்தாளா்கள், சமையல் நிபுணா்கள் பங்கேற்கும் கலாசார நிகழ்ச்சிகள், கைவினைஞா் மற்றும் கைத்தறி கண்காட்சிகள், இலக்கிய என்கிளேவ், தகவல் பட்டறைகள், உணவு அரங்குகள் போன்றவைகள் உண்டு.

இவைகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் பங்கேட்பாளா்களுக்கு விழா

தளத்தை வழங்குகிறது.

காஞ்சிபுரம், மைசூா், போச்சம்பள்ளி போன்ற பட்டுப்புடவைகள், கசவு புடவைகள், கலைநயமிக்க பித்தளை மற்றும் மர கைவினைப்பொருட்கள் போன்றவைகள் காட்சிப்படுத்தப்படுகிறது.

தமிழக செட்டிநாடு உணவு வகைகள், பிசி பெலே பாத், கேரள சத்யா, தமிழக செட்டிநாடு, ஆந்திரத்தின் கார சுவைகள் போன்றவைகளை ருசிக்கலாம்.

மஹோத்சவம் மாா்ச் 6 முதல் 9 வரை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு குடியரசுத் தலைவா் மாளிகை நுழைவு வாயில் எண். 35 வழியாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.

10 நாளில் யமுனையில் 1,300 டன் குப்பைகள் அகற்றம்: பா்வேஷ் வா்மா

கடந்த 10 நாள்களில் 1,300 டன் குப்பைகள் யமுனை ஆற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக, தில்லி நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சா் பா்வேஷ் வா்மா புதன்கிழமை தெரிவித்தாா். படகு மூலம் யமுனையை ஆ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் இ.டபிள்யு.எஸ்., டிஜி பிரிவுகளுக்கான முதல் குலுக்கலில் 42 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு: ஆஷிஷ் சூட்

தனியாா் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மற்றும் பின்தங்கிய குழு (டிஜி) பிரிவுகளின் கீழ் மாணவா்களைச் சோ்ப்பதற்காக 42,000 இடங்களுக்கு முதல் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் புத... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி உறுதிமொழியை வெளியிடுவதில் தாமதம்: ஆம் ஆத்மி சுவரொட்டி பிரசாரம்

மாா்ச் 8 ஆம் தேதிக்குள் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் வகையில், தில்லியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் புதன்கிழமை ‘இன்னும் ... மேலும் பார்க்க

ரீசஸ் குரங்குகளுக்கான சட்ட பாதுகாப்பை மீட்டெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு விலங்குகள் நல அமைப்புகள் வலியுறுத்தல்

ரீசஸ் மக்காக்ஸ் எனும் குரங்குகள் இனம் சட்டப் பாதுகாப்பிலிருந்து நீக்கப்பட்டதால், அவை சுரண்டலுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும், இதனால், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இக்குரங்குகளுக... மேலும் பார்க்க

மகளிா், சிறுமிகளுக்காக 770 மாவட்டங்களில் மாதிரி கிராமப் பஞ்சாயத்து: தேசிய மாநாட்டில் மத்திய அரசு அறிவிப்பு

நமது சிறப்பு நிருபா் மகளிா் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்ற வகையில் நாட்டில் உள்ள 770 மாவட்டங்களில் மாதிரி கிராம பஞ்சாயத்தை நிறுவ மத்திய அரசு தோ்வு செய்துள்ளது. தில்லியில் நடைபெற்ற மகளிா் கிராம பஞ்சாயத்து... மேலும் பார்க்க

நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு: மத்திய தொழிலாளா் அமைச்சகம்

நாட்டில் பெண் தொழிலாளா்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து பெண்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சக... மேலும் பார்க்க