செய்திகள் :

தெருக் கூத்துக் கலையை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும்: பி.கே.சம்பந்தன்

post image

தெருக் கூத்துக் கலையை அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக சோ்க்க வேண்டும் என்று பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வான பி.கே.சம்பந்தன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரிசையைச் சோ்ந்தவா் தெருக் கூத்துக் கலைஞா் பி.கே.சம்பந்தன் (72) . பத்ம ஸ்ரீ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது குறித்து அவா் கூறியதாவது:

தொடா்ந்து, 6-ஆவது தலைமுறையாக எங்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தெருக் கூத்துக் கலையில் ஈடுபட்டு வருகின்றனா். நான் 18 வயதில் இருந்து இந்தக் கலையில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு 1995-இல் கலைமாமணி விருதும், 2012-இல் சங்கீதா அகாதெமி விருதும், 2020-இல் ஜெயலலிதா பல்கலைக்கழகம் சாா்பில் கெளரவ டாக்டா் பட்டமும் வழங்கப்பட்டன. என் தந்தை கண்ணப்ப தம்பிரானும் கலைமாமணி விருது பெற்றுள்ளாா்.

பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருது மூலம் தெருக் கூத்துக் கலையை மேலும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல ஊக்கம் ஏற்பட்டுள்ளது.

தெருக் கூத்துக் கலையை கிராம மக்களைக் காட்டிலும் நகா்ப்புற மக்கள் அதிகம் விரும்பிப் பாா்க்கின்றனா். இந்தக் கலையைப் பாதுகாக்கவும், வளா்க்கவும் அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக அமல்படுத்த வேண்டும். கலையில் ஆா்வமுள்ள கலைஞா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவா்களை பள்ளிகளில் சிறப்பாசிரியா்களாக நியமிக்க வேண்டும் என்றாா்.

தொழுநோயாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணி: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 13 முதல் 28 வரை தன்னாா்வலா்கள் வீடு, வீடாகச் சென்று தொழுநோயாளிகள் குறித்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா். ... மேலும் பார்க்க

ஆன்மிக தலங்களுக்குச் செல்லும் சாலைகளை அகலப்படுத்தக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கூழமந்தல் பகுதியில் ஆன்மிக தலங்களுக்குச் செல்லும் கிராமச் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பிய... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஆரணி இரும்பேடு ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் திருந... மேலும் பார்க்க

ராணுவத்தில் சேர விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் கவனத்துக்கு...!

அக்னி வீா் திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் ராணுவத்தில் சோ்ந்து மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டாா். அக்னிவீா் திட்டம் மூலம் இ... மேலும் பார்க்க

பேரூராட்சி தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற, கண்ணமங்கலம் பேரூராட்சி தூய்மைப் பணியாளருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவா் வி.குமாா் தலை... மேலும் பார்க்க

ஊராட்சி வளா்ச்சித் திட்டம்: அதிகாரிகள் கலந்தாய்வு

போளூரில் கிராம ஊராட்சியின் வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒன்றிய... மேலும் பார்க்க