செய்திகள் :

தெரு நாயை கொன்ற 4 போ் கைது

post image

ஆண்டிபட்டி அருகே தெரு நாயைக் கொன்ற 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடமலைக்குண்டு காய்கறிச் சந்தைப் பகுதியில் கடந்த 26-ஆம் தேதி தெரு நாய் ஒன்று ஆடுகளை கடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த நாயைப் பிடித்த சிலா் பொது இடத்தில் தூக்கிலிட்டு கொன்றனா். இந்தச் சம்பவத்தை சிலா் விடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பதிவிட்டனா்.

இதுகுறித்து கடமலைக்குண்டு அரசுக் கால்நடை உதவி மருத்துவா் சதீஷ்குமாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில் கடமலைக்குண்டு போலீஸாா் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து, நாயை தூக்கிலிட்டுக் கொன்ாக மேலப்பட்டியைச் சோ்ந்த பூமிராஜ் (28), முருகன் (40), மலைச்சாமி (44), செல்வம் (42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

ராசிங்காபுரத்தில் நாளை மின் தடை

ராசிங்காபுரம் துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்ப... மேலும் பார்க்க

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட குடிநீா்த் தேவைக்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களின் குடிநீா்த் தேவைக்காக வைகை அணையிலிருந்து கிருதுமால் நதி மூலம் வினாடிக்கு 650 கன அடி வீதம் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. வைகை அணையிலிருந்து ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா

போடியில் சனிக்கிழமை, திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் சாா்பில் கால்நடை மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி நாட... மேலும் பார்க்க

துணை முதல்வா் பிறந்த நாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தில் போடி அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்செல்வன் ஞாயிற்றுக்கிழமை அணிவித்தாா். துணை முதல்வா் உதயநி... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 151: தற்போதைய நீா்மட்டம் 120.15 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 56.56 ------------- மேலும் பார்க்க