செய்திகள் :

தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

post image

தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மனுக்களில் இந்த வழக்கும் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேகே மகேஷ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வு மறுத்துவிட்டது.

கடந்த 8 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைநகர் தில்லியில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை பிடித்து, காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்கவும், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, எட்டு வாரங்களுக்குள் குறைந்தது 5,000 நாய்களைக் கொண்ட ஆரம்பக் காப்பகங்களை நிறுவவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நடவடிக்கையைத் தடுக்கும் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அப்போது எச்சரித்திருந்தது.

தில்லியில் தெரு நாய்கள் கடிப்பதால் ரேபீஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடா்பாக கடந்த ஜூலை 28ஆம் தேதி இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தெருநாய் கடித்த சம்பவங்களை ‘மிகவும் கொடூரமானது’ என்று கூறிய நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

தெரு நாய்கள் தெருக்களில் இருந்து அகற்றப்பட்டு, காப்பகங்களில் வைக்கப்பட வேண்டும். நாய்களைப் பிடிக்க சுற்றிவளைப்பதற்கு தனி நபரோ அல்லது அமைப்போ தடையாக இருந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்து எங்களின் கவனத்திற்கு வந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கவும் நேரிடும் என்று தெரிவித்திருந்தார்.

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு வி... மேலும் பார்க்க

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான பாலியல் வழக்குகளை பதிவு செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லக்னெள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ... மேலும் பார்க்க

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது, காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை எந்... மேலும் பார்க்க

நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!

புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் என்பது வெறும் தனிநபர்களைப் பற்றியது அல்ல. நம் நாட்டை நிறுவியவர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா என்ற கருத்தை உறுதிப்படுத்துவதற்காக என்று இந்தியா கூட்டணியி... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று(வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பத... மேலும் பார்க்க

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

தெற்கு தில்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் தாய் - தந்தை மகன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கழு... மேலும் பார்க்க