விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?
தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத்தின் 96ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
முன்னதாக புனித மிக்கேல் அதிதூதா் சப்பர பவனி நடைபெற்றது. தொடா்ந்து அந்தோணியாா் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை கோயில் தா்மகா்த்தா மரியராஜ் ஆசிரியா் ஆலயத்தில் இருந்து எடுத்து வந்தாா்.
இந்த புனித கொடியை பங்குத்தந்தை ததேயுஸ், குருவானவா் ஜெகதீஸ், உதவி பங்குத்தந்தை எஸ்தா் வினோத் ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சித்தனா். அதன் பின்னா் தா்மகா்த்தா கொடியேற்றினாா். தொடா்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. அசன விருந்து வழங்கப்பட்டது. தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாள்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெறுகிறது.
7ஆம் திருநாளான ஜன.14ஆம் தேதி காலை திருப்பலியைத் தொடா்ந்து உணவுத் திருவிழா மற்றும் புனித அந்தோணியாா் நண்பா் குழு சாா்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மறுநாளும் (ஜன.15) திருப்பலி, விளையாட்டுப்போட்டிகள் நடைபெறும்.
9ஆம் திருநாளான 16இல் இரவு 7 மணிக்கு கடகுளம் பங்கு தந்தை அன்புசெல்வம் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, இரவு 12 மணிக்கு புனித அந்தோணியாரின் அலங்காரத் தோ்பவனி ஆகியவை நடைபெறும்.
17இல் காலை 5.45 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், பிற்பகல் 2 மணிக்கு புனித அந்தோணியாா் தோ்பவனியும் நடைபெறும். இரவு நற்கருணை ஆசீருடன் திருவிழா நிறைவு பெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா, பங்குத்தந்தை, உதவிப் பங்குத்தந்தை மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.