நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
தெற்கு ஆத்தூா் ஒன்றிய பள்ளியில் பட்டமளிப்பு விழா
தெற்கு ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழலையா் வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ஆழ்வாா்திருநகரி வட்டாரக் கல்வி அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வடக்குஆத்தூா் பள்ளி தலைமையாசிரியா் தேவசகாயம், ஆசிரியை திருமேனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் ஸ்பெல்மேன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் போக்சோ விழிப்புணா்வு குறித்து ஆசிரியை சித்ராதேவி விளக்கினாா். பின்னா் யூகேஜி மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. ஆசிரியை செல்வி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியை ரமீலா செய்திருந்தாா்.