சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
தெற்கு தில்லியில் கல்லூரி, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தேசியத் தலைநகரில் உள்ள இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
‘எங்களுக்கு இரண்டு வெவ்வேறு வெடிகுண்டு மிரட்டல் தொடா்பான அழைப்புகள் வந்தன. லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இருந்து காலை 11.40 மணிக்கு ஒரு அழைப்பும், கைலாஷ் பகுதியின் கிழக்கில் உள்ள தாகூா் சா்வதேச பள்ளியிலிருந்து 11.17 மணிக்கு மற்றொரு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பும் வந்தது’ என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
உடனடியாக குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், ஆனால் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை.
ஒரு மோப்ப நாய்ப்படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படை குழுவின் ஒரு பகுதியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன என்று போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.