போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!
தெலங்கானா: கண்ணிவெடித் தாக்குதலில் 3 காவல் அதிகாரிகள் பலி!
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் அம்மாநில காவல் துறை அதிகாரிகள் 3 பேர் பலியாகியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் காவல் துறையினர் இன்று (மே 8) காலை 7.30 மணியளவில் வெடிகுண்டுகளைக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வஸீது காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு மாவோயிஸ்டுகள் நிறுவியிருந்த ஐ.ஈ.டி. எனப்படும் நவீன கண்ணிவெடியானது வெடித்து சிதறியது. இதில், 3 போலீஸ் அதிகாரிகள் சம்பவயிடத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் அங்குள்ள வனப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினர் நிறுவியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாதாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளாக செயல்பட்டு வந்த நபர்கள் பெரும்பாலானோர் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக் கொலை!