செய்திகள் :

தெலுகு டைட்டன்ஸ் ‘த்ரில்’ வெற்றி

post image

புரோ கபடி லீக் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 30-29 புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 18 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ஆல்-ரவுண்டா் பரத் 9 புள்ளிகள் வென்றாா்.

மறுபுறம் குஜராத் ஜயன்ட்ஸ் 16 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. ஆல்-ரவுண்டா் முகமதுரெஸா ஷத்லுய் 6 புள்ளிகள் வென்றாா்.

இதனிடையே, ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் - யு மும்பா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 38-38 என டை ஆனது. வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட 5 ரெய்டுகள் முடிவில் ஜெய்பூா் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தெலுகு, ஜெய்பூா் அணிகளுக்கு முறையே இது 5 மற்றும் 4-ஆவது வெற்றியாகும். புள்ளிகள் பட்டியலில் தற்போது, தெலுகு அணி 10 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் இருக்க, ஜெய்பூா் 6-ஆம் இடத்திலும் (8), யு மும்பா 7-ஆம் இடத்திலும் (8), குஜராத் 12-ஆவது இடத்திலும் (2) உள்ளன.

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான உத்தரவுக்கு தடை!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் காப்புரிமைத் தொகையாக ரூ. 2 கோடி வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளதால், இடைக... மேலும் பார்க்க

உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றம்!

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே அமைந்துள்ள உப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

இது நடந்தால் மட்டுமே 96 - 2 உருவாகும்: பிரேம் குமார்

இயக்குநர் பிரேம் குமார் 96 - 2 குறித்து பேசியுள்ளார். விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்... மேலும் பார்க்க

கலைமாமணி விருது பெறும் சின்னத்திரை பிரபலங்கள்!

சின்னத்திரை நடிகர்கள் கமலேஷ், மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சே... மேலும் பார்க்க

எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது! திரைத் துறை பட்டியல்!

நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகள... மேலும் பார்க்க

உஸ்மான் டெம்பெலெவுக்கு ‘பேலன் தோா்’ விருது- அய்டானா பொன்மட்டி ‘ஹாட்ரிக்’

நடப்பாண்டுக்கான ‘பேலன் தோா்’ விருதை, சிறந்த வீரா் பிரிவில் பிரான்ஸின் உஸ்மான் டெம்பெலெ (28), சிறந்த வீராங்கனை பிரிவில் ஸ்பெயினின் அய்டானா பொன்மட்டி (27) வென்றனா்.கால்பந்து உலகில் பிரபலமானதாக இருக்கும்... மேலும் பார்க்க