செய்திகள் :

கூடலூர்: மனிதர்களைத் தாக்கி வந்த யானை ராதாகிருஷ்ணன்; கும்கிகளின் உதவியோடு வனத்துறை பிடித்தது எப்படி?

post image

நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். தென்னிந்திய யானை வழித்தடங்களின் இதயம் என்று அழைக்கப்படும் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் யானை - மனித எதிர்கொள்ளல்களைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது.

கும்கி யானைகள்
கும்கி யானைகள்

இந்தப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் தனியார் பெருந்தோட்டங்களின் செயல்பாடுகளால் யானைகளின் வழித்தடங்களில் சிதைவு ஏற்பட்டு தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி யானைகள் நகர்வதாக ஆய்வாளர்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் என உள்ளூர் மக்களால் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்த ஆண் யானை ஒன்று தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வருவதாகவும் அந்த யானையை இங்கிருந்து பிடித்துச் செல்ல வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

அந்த யானையைப் பிடிக்க வனத்துறை உத்தரவிட்டது. 4 கும்கி யானைகளைக் களத்தில் இறக்கி நூற்றுக்கணக்கான வனப்பணியாளர்கள் அந்த யானையைப் பிடிக்கும் பணியில் ஓவேலி, எல்லமலை பகுதியில் முகாமிட்டிருந்தனர்.

கூடலூர் ஓவேலி வனப்பகுதி
ஓவேலி

கிட்டத்தட்ட கடந்த ஒரு வாரமாக இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மயக்க ஊசி செலுத்தி அந்த யானையைப் பிடித்துள்ளனர். பின்னர் அந்த யானையை வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் யானைகள் முகாம் மரக்கூண்டில் அடைத்துள்ளனர். யானையின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்துத் தெரிவித்துள்ள வனத்துறையினர், "ஓவேலி பகுதியில் நடமாடி வந்த சுமார் 40 வயதான ஆண் யானை ஒன்று பிரச்னைக்குரிய யானையாக அறியப்படுகிறது. மக்களின் நலன் கருதி அந்த யானையை அங்கிருந்து அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எல்லமலை பகுதியில் நடமாடி வந்த அந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். நேற்று நண்பகல் வாக்கில் கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

பிடிக்கப்பட்ட யானை

அரை மயக்கத்தில் நின்ற யானையை கும்கிகள் மற்றும் பாகர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இரவோடு இரவாக முதுமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு க்ரால் எனப்படும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு க்ராலுக்குள் வைத்து யானையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதன் பின்னரே இந்த யானையை விடுவிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்" என்றனர்.

ஓவேலி பகுதியில் யானைகளுக்கு ஏற்பட்டிருக்கும் இடர்பாடுகள் குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனச் சூழலியல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்... ரத்து செய்ய கோரிய நடிகையின் மனு தள்ளுபடி

கடந்த அ தி மு க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்நிலையில் இன்று (செப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ட... மேலும் பார்க்க

கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, செந்தில் பாலாஜி ஷாக்

கொங்கு மண்டலம்தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் என்றால் வியூகங்கள் இருப்பது வழக்கம். அதில் மாற்றுக் கட்சியினரை தங்களின் கட்சிக்கு... மேலும் பார்க்க

எட்டப்ப மன்னர் பற்றி அவதூறு? "சினிமாதானே என விட்டது பின்னாளில்" - எட்டயபுர மன்னர் தலைமையில் கண்டனம்

எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதைக் கண்டித்தும், வரலாற்றுத் தகவல் பிழையை நீக்க வலியுறுத்தியும், உண்மை வரலாறு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை வலியுறு... மேலும் பார்க்க

H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

தற்போது உலகம் முழுக்கவே H-1B விசா குறித்து பேச்சுகள் சுற்றி வருகின்றன. கடந்த 22-ம் தேதி முதல், புதிய ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் செல்பவர்கள் 1 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க... மேலும் பார்க்க

தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்" - குஷ்பு

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகு பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவை பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிவருகி... மேலும் பார்க்க