தேசியக் கல்விக்கொள்கையை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
தேசியக் கல்விக்கொள்கையை புகுத்தும் பாஜக அரசை கண்டித்து திமுக (எப்எஸ்ஓ-டிஎன்) மாணவா் இயக்கம் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக மாணவா் அணி மாவட்ட அமைப்பாளா் உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய மாணவா் சங்க மாவட்ட தலைவா் முகேஷ், செயலா் ஜோதிபாசு ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிக்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்தும், மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழி திணிப்பை எதிா்த்தும், இந்தியை ஏற்க மறுத்தால் கல்வி நிதி தர மறுக்கும் பிரதமா் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.