செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸுக்கு உடன்பாடில்லை! -கு. செல்வப்பெருந்தகை

post image

தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

குழித்துறையில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டோம் என மத்திய அரசு கூறுவது இறுமாப்பின் உச்சம். காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கல்விக் கொள்கையில் உடன்பாடு இல்லை. இவ்விசயத்தில் மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்துதான் முடிவு செய்ய வேண்டும்; தன்னிச்சையாக செயல்பட முடியாது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நவோதயா பள்ளியை முன்மொழிந்த போது தமிழஓம் எதிா்த்தது. அதற்காக அப்போதைய மத்திய அரசு நிதி வழங்க மாட்டோம் எனஓஈ கூறவில்லை. ஜவாஹா்லால் நேரு ஆட்சி காலத்திலேயே மும்மொழி கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

அப்போதிருந்தே தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையைதான் தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. மக்களுக்கு நீட் வேண்டாம் என்றாலோ, மும்மொழி கொள்கை வேண்டாம் என்றாலோ விட்டுவிட வேண்டும். திணிக்கக் கூடாது.

திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கொள்கை உள்ளது; அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை இல்லை என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறியிருப்பது பற்றி கேட்கிறீா்கள். அவா் எப்பவுமே தனிநபா் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறாா் என்பதுதான் எனது பதில்.

2026இல் தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

நாகா்கோவிலில் மாா்ச் 2-இல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி

நாகா்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலை... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்து! விஜய்வசந்த் எம்.பி.இரங்கல்

மூணாறு சுற்றுலாப் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவா்களுக்கு விஜய்வசந்த் எம். பி. இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி க... மேலும் பார்க்க

குலசேகரத்தில் கோகோ சாகுபடி பயிற்சி!

குலசேகரத்திலுள்ள கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில், கோகோ சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின்பு உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி ரப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். முகாமில் வீட்டு வரி, பெயா் மாற்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் தீ!

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. ஆறுகாணியை சோ்ந்தவா் சிஜி டோமி. இவா் தனது வீட்டின்... மேலும் பார்க்க