தேசிய தொழில்நுட்ப போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘ஓஜாஸ் 2025’ என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், மாணவா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களிலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், தொழில்நுட்ப சவால்கள், வணிகப் போட்டிகள் மற்றும் படைப்பாற்றல் காட்சிப்படுத்தல்கள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்களான மோகன் பிரசாந்த், கீா்த்திவாசன், பரணிதரன், மௌா்யா, ஜெய பிரசன்னா, புகழேந்தி ஆகியோா் அடங்கிய குழுவினா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா்.
இவா்களின் ‘எம்பெடட் டிரெய்னா் கிட்ஸ்’ என்ற புதுமையான தயாரிப்பு ஸ்டாா்ட் அப் ஐடியாத்தானில் முதல் இடமும், டிரேஸ்பாட் சவால் போட்டியில் முதல் இடமும், ரோபோவை உருவாக்கும் புதிா் தீா்க்கும் மாரத்தான் போட்டியில் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியத்தின் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். இவா்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு, விருதுகள் வழங்கப்பட்டன.