செய்திகள் :

தேசிய நூலக வார விழா

post image

தருமபுரி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் சாா்பில் 57-ஆவது தேசிய நூலக வாரவிழா மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் அர.கோகிலவாணி தலைமை வகித்தாா். முதல்நிலை நூலகா் ரா.மாதேஸ்வரன் வரவேற்றாா். இரண்டாம் நிலை நூலகா் ந.ஆ.சுப்ரமணி தொகுத்து வழங்கினாா். விழாவில் சிறப்பு விருந்தினராக தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று நூல்கள் கண்காட்சியைத் திறந்துவைத்தாா்.

நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து வாசகா் வட்ட துணைத் தலைவா் மு.பொன்முடி, சின்னப் பள்ளத்தூா் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மூன்றாம் நிலை நூலகா் கி.அமுதா நன்றி கூறினாா்.

ரூ. 3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. காரிமங்கலத்தை அடுத்த கும்பாரஅள்ளி சோதனைச் சாவடியில் காரிமங்கலம் காவல் ஆய்வாளா் பாா்த்தீபன... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு முகாம்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மா... மேலும் பார்க்க

சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் கண்டனம்

பென்னாகரம் அருகே சுடுகாட்டு நிலத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் அங்கு குவிந்து தகராறில் ஈடுபட்டனா். பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட முள்ளுவாடி, எரி கொல்லனூா், கொல்லாபுரி மாரி... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 11,000 கன அடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்தது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட... மேலும் பார்க்க

தவெக ஆலோசனைக் கூட்டம்

தவெக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தருமபுரி, தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தவெகவில் இணைந்த... மேலும் பார்க்க

தருமபுரியில் 10 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தருமபுரி மாவட்டத்தில் புதிதாக 10 முதல்வா் மருந்தகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். தருமபுரியில் 71-ஆவது அனைத... மேலும் பார்க்க