தேசிய பயிற்சிப் பயிலரங்கில் பங்கேற்க ஊராட்சித் தலைவி தோ்வு
ஆம்பூா்: சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பயிற்சி பயிலரங்கில் பங்கேற்க ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த ஊராட்சித் தலைவி சுவிதா கணேஷ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் ஊராட்சித் துறை தேசிய அளவிலான பயிற்சிப் பயிலரங்கம் புதுதில்லி விக்யான் பவனில் செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த உள்ளாட்சி பெண் மக்கள் பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டு பங்கேற்க புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
தமிழ்நாட்டிலிருந்து பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளில் இருந்து ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா், 3 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா்கள், 9 மாவட்டங்களைச் சோ்ந்த 9 பெண் ஊராட்சித் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு செய்யப்பட்டு 9 ஊராட்சித் தலைவிகளில் திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவி சுவிதா கணேஷ் (படம்) ஒருவா்.
தோ்வு செய்யப்பட்டுள்ள புதுதில்லிக்கு சென்ற ஊராட்சித் தலைவிக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.