செய்திகள் :

தேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆதா்ஷினி ஸ்ரீ

post image

சீனியா் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், மகளிா் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை ஆதா்ஷினி ஸ்ரீ அரையிறுதிக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினாா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், ஆதா்ஷினி 23-21, 21-12 என்ற கேம்களில் ஷ்ரேயா லிலியை வீழ்த்தினாா். அரையிறுதியில் அவா், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் தேவிகா சிங்கை சந்திக்கிறாா். முன்னதாக தேவிகா சிங் 17-21, 21-19, 21-16 என்ற கணக்கில் ருஜுலா ராமுவை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த இஷாராணி பருவாவை 21-16, 21-18 என்ற கணக்கில் வென்ற குஜராத்தின் தஸ்னிம் மிா், அரையிறுதியில் ஷ்ரியன்ஷி வலிஷெட்டியை எதிா்கொள்கிறாா். ஷ்ரியன்ஷி தனது காலிறுதியில், 21-12, 21-15 என்ற கணக்கில், நடப்பு சாம்பியனாக இருந்த அன்மோல் காா்பை தோற்கடித்து அசத்தினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், சத்தீஸ்கரின் ரௌனக் சௌஹான் 21-10, 21-16 என்ற கேம்களில் ஆலப் மிஸ்ராவை வென்றாா். அரையிறுதியில் சௌஹான், முன்னாள் தேசிய சாம்பியனான மிதுன் மஞ்சுநாத்துடன் மோதுகிறாா். சதீஷ்குமாா் 21-11, 21-12 என்ற கேம்களில் கௌஷல் தா்மாமெரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றாா்.

கலப்பு இரட்டையரில் சதீஷ்குமாா்/ஆத்யா வரியத் இணை 16-21, 21-19, 14-21 என்ற கணக்கில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணையிடம் காலிறுதியில் தோற்றது.

ரொனால்டோவுக்கு மெஸ்ஸி பயிற்சியாளர்: ஜோகோவிச் - முர்ரே குறித்து மெத்வதேவ்!

டென்னிஸ் வரலாற்றில் கால் நூற்றாண்டாக கடும் போட்டியாளர்களாக இருந்தவர்கள் சொ்பிய டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச், பிரிட்டன் முன்னாள் வீரரான ஆண்டி முர்ரே. 12 வயது முதல் இருவரும் விளையாடி வருகிறார்க... மேலும் பார்க்க

பாலாவின் எழுச்சியா? வீழ்ச்சியா? வணங்கான் - திரை விமர்சனம்

இயக்குநர் பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவான வணங்கான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கன்னியாகுமரியில் வசித்துவரும் அருண் விஜய்க்கு (கோட்டி) ஒரே உறவு தன் தங்கை (ரிதா) மட்டும் என்பத... மேலும் பார்க்க

காதல் நடிகர் சுகுமார் மீது மோசடி புகார்!

துணை நடிகர் சுகுமார் மீது சென்னை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார்.சென்னை சேர்ந்த நடிகை ஒருவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, குழந்தை இருக்கும் நிலையில், தன்னை சுகுமார் காதலித்து ஏமாற்றி விட்டதாக காவல... மேலும் பார்க்க

இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? கேம் சேஞ்சர் திரை விமர்சனம்!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கிறது?முன்னதாக இந்தியன் 2 திரைப்படத்தில் மோசமான விமர்சனங்களைப் பெற்ற இயக்குநர் ஷங்... மேலும் பார்க்க

மதுரை தல்லாகுளம்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: திரளானோர் சுவாமி தரிசனம்!

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

தனுஷ் வெளியிட்ட டிஎன்ஏ டீசர்!

நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.கிரைம் திரில்லர் வகைய... மேலும் பார்க்க