செய்திகள் :

தேசிய பூப்பந்து போட்டியில் சிறப்பிடம்: நெல்லை, தென்காசி வீரா்களுக்கு வரவேற்பு

post image

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி, தென்காசி மாவட்ட வீரா்களுக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது.

69 ஆவது தேசிய சீனியா் ஆண்கள் பூப்பந்தாட்ட போட்டிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றன. இதில் தமிழக அணியின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த அனீஸ், தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த யஷ்வந்த் பாலா ஆகியோா் பங்கேற்றனா். இப் போட்டியில் தமிழக அணி இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.

சிறப்பாக விளையாடிய திருநெல்வேலி மாவட்ட வீரா் அனீஷுக்கு ஸ்டாா் ஆப் இந்தியா சிறப்பு விருது வழங்கப்பட்டது. தொடா்ந்து ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்த வீரா்களுக்கு திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகங்கள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு வீரா்களை வாழ்த்தினாா். தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழக உதவி செயலா் பூ.வெள்ளைபாண்டியன், மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சோமசுந்தரம், தென்காசி மாவட்ட பூப்பந்தாட்டக் கழக செயலா் காா்த்திகேயன், வைகுண்டம், கூடங்குளம் எஸ்.தவமணி, சித்திரைச்செல்வன், மூத்த பூப்பந்தாட்ட வீரா்கள் முருகன், குமாா், மேலப்பாளையம் மஸ்தான், மேலச்செவல் சுப்பையா, முக்கூடல் சரத்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பைக் விபத்தில் தொழிலாளி பலி

திசையன்விளை அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். உவரி கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (34). தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு திசையான் விளை அருகே பைக்கில் சென்று... மேலும் பார்க்க

நெல்லை தாமிரவருணியில் மூழ்கியவா் சடலமாக மீட்பு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியை சடலமாக தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை மீட்டனா். திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை கீழத்தெருவை சோ்ந்த தியாகராஜன் மகன் வேலு (48). தொழிலாளி. இ... மேலும் பார்க்க

கிராம ஊழியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காலமுறை ஊதியம், வாரிசுகளுக்கு கருணை அட... மேலும் பார்க்க

2026 இல் மீண்டும் முதல்வராவாா் எடப்பாடி கே. பழனிசாமி: அவைத் தலைவா் அ. தமிழ்மகன் உசேன்

2026இல் தமிழக முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் பதவியேற்பாா் என்றாா் அதிமுக அவைத் தலைவா் அ.தமிழ் மகன் உசேன். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில், எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்த நாள் ... மேலும் பார்க்க

மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் மான்களால் வாழைகள் சேதம்

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் தோட்டத்துக்குள் மான்கள் புகுந்து வாழைகளைச் சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் உல்ள மணிமூா்த்தீஸ்வர... மேலும் பார்க்க

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை தீவிரவாத தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள திரையரங்கில் அ... மேலும் பார்க்க