தேசிய வில்வித்தைப் போட்டி: கும்மிடிப்பூண்டி மாணவிகளுக்கு வெண்கலம்
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான தேசிய வில்வித்தை போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவிகள் 3 போ் வெண்கலப் பதக்கம் வென்றனா்,
இந்தப் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். தமிழகத்தின் சாா்பில் யு-17 மகளிா் அணிகள் பிரிவில் கும்மிடிப்பூண்டி மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவிகளான சி.தவ்ஷிகா தஸ்னிம், ர.ரஞ்சனி ,எ.சு.தரங்கிணி ஆகிய மூவரும் பங்கேற்றனா்.
மூவரும் கும்மிடிப்பூண்டியில் குயிக் ஸ்பேரோ வில்வித்தை பயிற்சி மையத்தில் பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணனிடம் பயிற்சி பெறுகின்றனா்.
இதில் 3 மாணவிகளும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனா்.