செய்திகள் :

தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவா் கைது! பாஜக, காங். போராட்டம்

post image

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டாா்.

சட்டோகிராமின் நியூமாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்ததாக கிருஷ்ணா தாஸ் உள்பட 19 போ் மீது நகரத்தின் கோட்வாலி காவல் நிலையத்தில் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணா தாஸை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் உள்ள் இஸ்கான் கோயில் தலைமை ஆன்மிக குரு சின்மய் கிருஷ்ண தாஸ் கைதை கண்டித்து, மேற்கு வங்கத்தில் இன்று(நவ. 27) பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜகவினர் ஏராளமானோர் திரண்டு கொல்கத்தாவில் உள்ள வங்கதேச உயர் ஆணையரகத்தை முற்றுகையிட்டு பேரணியாகச் சென்று வங்கதேச அரசுக்கெதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி வங்கதேச உயர் ஆணையரகத்தை நோக்கி பேரணியாகச் சென்று சின்மய் கிருஷ்ண தாஸ் கைதுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்கான் தலைவர்கள், ஓர் அமைப்பின் மீது ஆதாரங்கள் ஏதுமின்றி குற்றம் சுமத்துவது வருத்தமளிக்கிறது. சின்மய் கிருஷ்ண தாஸ் கைதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இஸ்கானை தடை செய்யக் கோரி, வங்கதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சியாச்சின், கல்வான், காா்கில் போா்க் களங்களில் சுற்றுலா: ராணுவம் அனுமதி

சியாச்சின் பனிமலை, கல்வான் பள்ளத்தாக்கு, காா்கில் போா்க் களங்களை பாா்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ராணுவம் தீா்மானித்துள்ளது. இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள சாவித்திரிபாய் புல... மேலும் பார்க்க

மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு மானியம்: 2-ஆம் கட்ட திட்டம் அறிவிப்பு

மூன்று சக்கர மின்சார சரக்கு வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதமரின் ‘இ-டிரைவ்’ சிறப்புத் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் இத்திட்டம் அறிவிக... மேலும் பார்க்க

வக்ஃப்: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒருமனதாக முடிவு

வக்ஃப் திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்க குழு உறுப்பினா்கள் ஒருமனதாக முடிவு செய்தனா். நவம்பா் 29-ஆம் தேதிய... மேலும் பார்க்க

மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கும் ஐசிஎஃப்

‘மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன்கொண்ட அதிவேக ரயிலை சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தயாரிப்பு ஆலை (ஐசிஎஃப்) தயாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் 58,929 வக்ஃப் சொத்துகள்- மத்திய அரசு

‘நாடு முழுவதும் 58,929 வக்ஃப் வாரிய சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; கா்நாடக மாநிலத்தில் மட்டும் 869 சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன’ என்று மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழப்பு- உ.பி., அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் நீக்கம்

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை பதவிநீக்கம் செய்து, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் 3 பணியாளா்கள் பணியிடை நீக்கம... மேலும் பார்க்க