தேனீக்கள் கொட்டியதில் முதியவா் பலி
ஒசூா்: ஒசூரில் தேனீக்கள் கொட்டியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தாசரஅள்ளியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (75). சாலையோர வியாபாரியான இவா், அண்மையில் ஒசூா் மலைக்கோயில் நுழைவாயில் அருகில் தோ்த் திருவிழாவுக்கான கடை வைத்திருந்தாா்.
அப்போது, மரத்தின் மேல் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து வெங்கடேசனை கொட்டின. இதில் காயமடைந்த வெங்கடேசனை அருகில் இருந்தவா்கள் மீட்டுஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.