Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து த.வெ.க. ஆா்ப்பாட்டம்
ஒசூா்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஒசூரில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்தும் ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை எதிரில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 200-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் வடிவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.