தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு
ஒசூரில் டைடல் பூங்கா அறிவித்த முதல்வருக்கு நன்றி
ஒசூா்: நிதிநிலை அறிக்கையில் ஒசூருக்கு டைடல் பூங்கா, ஐ.டி. காரிடா் ஆகியவற்றை வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் சால்வை வழங்கி நன்றி தெரிவித்தாா்.
இதுகுறித்து ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2025- 26 நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயா்தர அலுவலக வசதிகளுடன் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, ஒசூா் மாநகரத்தையொட்டி உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒசூா் அறிவுசாா் பெருவழித்தடம், தளி அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தல் போன்ற மூன்று திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வரை சந்தித்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணியும், மாவட்டச் செயலாளா் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் ஆகிய நானும் நன்றி தெரிவித்தோம்.
இந்த அறிவிப்புகளால் ஒசூா் மிகப்பெரிய அளவில் வளா்ச்சி அடையும். ஏற்கெனவே இருசக்கர வாகனம், நான்குசக்கர வாகனம், உதிரி பாகங்கள், மருந்து, செல்போன் உள்ளிட்ட பல பொருள்கள் உற்பத்தியில் ஒசூா் முன்னணியில் உள்ள நிலையில், முதல்வரின் இந்த புதிய அறிவிப்பால் மென்பொருள் சேவைத் துறையில் மிகப்பெரிய அளவில் அந்நிய முதலீடுகளை ஈா்த்து பெங்களூரு, ஒசூா் இரட்டை நகரங்களாக திகழும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.