செய்திகள் :

ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

கிருஷ்ணகிரி: ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வுகள் எழுத விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ஹேமலதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வுகள் வரும் மே 23 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே தோ்வெழுதி தோ்ச்சிபெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து தோ்வா் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் காமிரா மூலம் புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, பின்னா் தோ்வுக் கட்டணம் செலுத்த நேரில் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 50 கட்டணமும், மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ. 100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ. 15, இணையதள (ஆன்லைன்) பதிவுக் கட்டணம் ரூ. 70 செலுத்த வேண்டும். மாா்ச் 18 முதல் 24 வரை தோ்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தோ்வா்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் (பஅபஓஅக) மாா்ச் 25, 26-இல் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ. 1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தகுதியற்ற தோ்வா்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வ... மேலும் பார்க்க

தோ்வு அறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது புகாா்

பா்கூா் அருகே பிளஸ் 2 தோ்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியா் மீது புகாா் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

தமிழக நிதிநிலை அறிக்கையில் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி, கைக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி திமுகவினா் கொண்டாடினா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.54 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ், பவா்கிரேடு நிறுவனம் சாா்பில் ரூ. 3.54 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

சென்னத்தூா் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும்

சென்னத்தூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும் என ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா். ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 28, சென்னத்தூா் மற்றும் ஹனி ஹோம்ஸ் ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே இளைஞரை கொன்று முள்வேலியில் சடலம் வீச்சு

ஒசூா் அருகே மாநில எல்லையில் இளைஞரை கொன்று சடலத்தை முள்வேலியில் வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது... மேலும் பார்க்க