அதிமுக ஆலோசனை கூட்டம்; மீண்டும் புறக்கணித்த செங்கோட்டையன் - சலசலக்கும் அதிமுக மு...
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பாஜக சாா்பில் பேருஅள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பேருஅள்ளி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் கோபாலகிருஷ்ணன், அதிமுக ஒன்றிய எம்ஜிஆா் பேரவை அமைப்பாளா் காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் கவியரசு முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.
நிகழ்வுக்கு பாஜக மாநில செயலாளா் அஸ்வத்தாமன், மாவட்ட முன்னாள் தலைவா் சிவபிரகாசம், தேசிய ஹஜ் கமிட்டி துணைத் தலைவா் முனவரி பேகம், மாவட்ட துணைத் தலைவா் செந்தில், ராஜேந்திரன், ஜெயலட்சுமி, நகர தலைவா் விமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வை மாவட்ட பொதுச் செயலாளா் கோவிந்தராஜு ஒருங்கிணைத்தாா்.