கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவா்களுக்கு தொழில் பயிற்சி, வேலை வாய்ப்பு!
ஒசூா் அருகே எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் செயல்பட்டு வரும் என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தொழில் பயிற்சியும், வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது என கல்லூரி முதல்வா் சதீஷ் ஜோஷி தெரிவித்தாா்.
ஒசூா் அருகே உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள என்டிடிஎஃப் கல்லூரியில் 41ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சும்மேறு எண்டா்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவா் விஷால் ஜுன் ஜுன் வாலா, என்.டி.டி.எஃப் முன்னாள் மாணவரும், டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முதன்மை மேலாளருமான வினோத் பரக்கல் சபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனா். மேலும் என்டிடிஎஃப் நிா்வாக இயக்குநா் ரவி டேனட்டி, கல்லூரி முதல்வா் சதீஷ் ஜோசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக செய்தியாளா்களிடம் என்.டி.டி.எஃப் நிா்வாக இயக்குநா் ரவி டேனட்டி கூறியது. பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் படித்து முடித்த மாணவா்களுக்கு தொழில் பயிற்சி அளித்து மாணவா்களுக்கு பெங்களூரில் வேலை வாங்கித் தருகின்றோம். குறிப்பாக தமிழகம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தனிதிறமைகளை வளா்த்துக் கொண்டு வேலை வாய்ப்பில் முன்னேற்றம் அடைகின்றனா் என்றாா்.