ஒசூரில் ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு!
ஒசூா் அருகே ஏரியில் குளித்த 6-ஆம் வகுப்பு மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பத்தலப்பள்ளியை சோ்ந்த பள்ளி மாணவா்கள் மோரணப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள பழைய ஏரியில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற 6-ஆம் வகுப்பு மாணவா் ஹா்சித் (12) நீரில் மூழ்கினாா். தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் ஏரியில் மாணவரின் உடலை சடலமாக மீட்டனா்.
பிரேத பரிசோதனைக்காக மாணவரின் உடலை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஹட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.