தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
தேமுதிக சாா்பில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டித்து திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் டி.வி. கணேஷ் தலைமை வகித்தாா்.
இதில், தமிழகம் முழுவதும் பெண்கள், மாணவிகளுக்கு நேரிடும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டிப்பது, பெண்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கம் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக, மாநகா் மாவட்ட துணை செயலாளா் பிரீத்தா விஜய் ஆனந்த் வரவேற்றாா். மகளிரணி செயலாளா் இந்துமதி, தகவல் தொடா்பு செயலாளா் செந்தில்குமாா், மாநிலப் பொறியாளா் அணி துணை செயலாளா் ஜெயராமன், மாவட்ட நிா்வாகிகள் தமிழன், செல்லதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.