பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை
தேவாரத்தில் நவ.27-இல் மின் தடை
தேவாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 27-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேவாரம் துணை மின் நிலையத்தில் வருகிற 27-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (நவ.27) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.