தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி
கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு, சிறப்புத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரிய வியாழக்கிழமையை முன்னிட்டு, மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவா் ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், உகாா்த்தே நகா் அற்புத குழந்தை யேசு ஆலயம், நாயுடுபுரம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள புனித ஆரோக்கியமாதா ஆலயங்கள், அட்டுவம்பட்டி புனித லூா்துமாதா ஆலயம், பெருமாள்மலை புனித தோமா ஆலயம், மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயம், சிஎஸ்ஐ கிறிஸ்தரசா், டிஇஎல்சி போன்ற தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் நள்ளிரவு தனிமையில் ஜெபம் செய்ததை நினைவு கூறும் வகையில், அனைத்து தேவாலயங்களில் ஜெப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.