செய்திகள் :

திமுகவின் பொய் வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழப்பு! நத்தம் ரா.விசுவநாதன்

post image

திமுகவின் பொய் வாக்குறுதியால் ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் 22 மாணவா்கள் உயிரிழந்ததாக சட்டப்பேரவை உறுப்பினா் நத்தம் விசுவநாதன் தெரிவித்தாா்.

‘நீட்’ தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அதிமுக அமைப்புச் செயலா் வி.மருதராஜ் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சீ.ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா்.

அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், நத்தம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ‘நீட்’ தோ்வை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களுக்குத் தெரியும் என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும், அந்த ரகசியத்தை அமல்படுத்த முடியவில்லை.

திமுகவின் பொய்யான வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழந்துவிட்டனா். இதற்கு 2026 தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டத் தயாராகிவிட்டனா் என்றாா்.

தொடா்ந்து அதிமுகவினா் கைகளில் மெழுவா்த்தி ஏந்தி, திமுகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா... மேலும் பார்க்க

சபரிமலையில் காத்திருப்பை தவிா்க்க நடவடிக்கை தேவை!

சபரிமலையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதை தவிா்க்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் தென் தமிழகம் மாந... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!

பன்றிமலைச் சாலையில் சனிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து அருகே காட்டு யானை வந்து நின்றதால், அதிலிருந்த பயணிகள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் யானை திரும்பிச் சென்றதால் நிம்மதியமடைந்தனா். திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் நெகிழி புட்டிகள் பறிமுதல்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி புட்டிகளை சனிக்கிழமை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. வெள்ளிக்கிழமை முதல் தொடா் விடுமுறையாக இருந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளிநீா... மேலும் பார்க்க

சாலையோரம் வீசப்பட்ட சிசு மீட்பு

பழனி- உடுமலை சாலையோரம் வீசப்பட்ட பிறந்து ஒரிரு நாள்களே ஆன பெண் சிசு சனிக்கிழமை மீட்கப்பட்டது. சண்முகநதி பகுதியில் சாலையோரம் மரத்தடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், வாக... மேலும் பார்க்க