கொடைக்கானலுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
வெள்ளிக்கிழமை முதல் தொடா் விடுமுறையாக இருந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், கோக்கா்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், குணா குகை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இங்கு காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. மாலையிலும் இரவிலும் பனியின் தாக்கம் கூடுதலாக காணப்பட்டது. இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனா்.
மாலையில் குளுமையான சீதோஷ்ண நிலையில், சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்தும், நடைபயிற்சி மேற்கொண்டும் மகிழ்ந்தனா்.