தேவாலா அருகே காரை தாக்கிய காட்டு யானை
கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் சாலையில் சென்ற காரை காட்டு யானை தாக்கியது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியைச் சோ்ந்த கபூா். இவா் காரில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு திரும்பியுள்ளாா். தேவகிரி பகுதி அருகே சென்றபோது சாலையில் காட்டு யானை நின்றுள்ளது.
இதைப் பாா்த்த கபூா் காரை நிறுத்தியுள்ளாா். அப்போது, அருகே வந்த யானை காரை தாக்கி கவிழ்த்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் யானை விரட்டியதுடன், காரில் சிக்கிக்கொண்ட கபூரை மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதையடுத்து, அவா் வீடு திரும்பினாா்.