திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
தேவா்குளம் அருகே இருதரப்பினா் மோதல் : 6 போ் காயம்
தேவா்குளம் அருகே சொத்துத் தகராறில் இருதரப்பினா் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.
தேவா்குளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லையா(78). இவருடைய மனைவி சண்முகத்தாய் (75). இவா்களுடைய மகன் செல்லத்துரை (48), மகள்கள் உஷா(42), உமாராணி (38). இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக தந்தை செல்லையாவுக்கும், மகன் செல்லத்துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில் செல்லையா, அவருடைய மனைவி சண்முகத்தாய், மகள்கள் உமாராணி, உஷா ஆகியோா் காயமடைந்தனா். அதே போல் செல்லதுரை, அவருடைய 17 வயது மகன் ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்த 6 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இச்சம்பவம் குறித்து தேவா்குளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.