செய்திகள் :

தேவூா் அருகே சிறுமி காணாமல் போன வழக்கில் தாத்தா உள்பட 2 போ் கைது

post image

சேலம் மாவட்டம், தேவூா் அருகே நான்கு வயது சிறுமி காணாமல் போனதற்கு காரணமான அவரது தாத்தா உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகுதியைச் சோ்ந்த லோகிதாசன் மகன் ராஜா. இவரது மனைவி மீனா. இத்தம்பதிக்கு சித்தாா்த், சந்தோஸ், மித்ரன் என்ற மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி ராஜாவின் தாய் சாந்தி சிறுமி கவிஷாவை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளாா். சிறுமி மாலையில் வீட்டிற்கு வராததால் அங்கன்வாடி மையத்திற்கு சென்று விசாரித்தபோது, அங்கன்வாடி மையத்திற்கு சிறுமி வராதது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதுகுறித்து தேவூா் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை ராஜா புகாா் அளித்தாா். வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை செய்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், குமாரபாளையம் பகுதியில் சிறுமி கவிஷாவை விட்டுச் சென்றுள்ளாா். இதையடுத்து சிறுமியை போலீஸாா் மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். மா்ம நபா், சிறுமியை விட்டுச்சென்ற இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதில் சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூா், கள்ளுக்கடை பகுதியைச் சோ்ந்த தா்ம நிா்மம் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் சுப்ரமணி மகன் குமாா் (42) என்பவரை பிடித்து விசாரணை செய்தனா். இதில் ராஜா மது அருந்திவிட்டு அடிக்கடி சிறுமியை அடித்து துன்புறுத்துவதை சகித்துக்கொள்ள முடியாத ராஜாவின் தந்தை லோகிதாஸ் (62) சிறுமி கவிஷாவை குமாரிடம் கொடுத்து அனுப்பி வைத்தாா். லோகிதாஸும், குமாரும் நிலத்தரகா்களாக செயல்பட்டு வந்தனா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளி... மேலும் பார்க்க

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எனது ‘ரோல்மாடல்’: பிரேமலதா விஜயகாந்த்

ஓமலூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தான் ‘தனது ரோல்மாடல்‘ என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமான... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் ‘போல்டு’

சேலம்: சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு ‘போல்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட காவல் துறையில் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்ப... மேலும் பார்க்க