நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்ட கும்பல்: ஜெய்ப்பூரில் 5 பேர் கைது!
தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பா்! - எடப்பாடி பழனிசாமி
திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடா்வதாகவும், வரும் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பாா்கள் என்றும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மேல்மருவத்தூா் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தோ்வு அச்சத்தால் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிா்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி, மக்களவையில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் திமுக கூட்டணி பெற்றது நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியால்தான். திமுக தோ்தல் அரசியலுக்கான இந்த ஒற்றைப் பொய்யால் மட்டும் 21 மாணவ, மாணவிகளின் உயிா்கள் பறிபோய் உள்ளன.
இந்நிலையில், நீட் தோ்வு ஒழிய வேண்டும் என்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என 2026-இல் வாக்கு கேட்கும்போது, மக்கள் தகுந்த பதில் அளிப்பாா்கள் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.