செய்திகள் :

தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பு-காங்கிரஸ் உயா்நிலைக் கூட்டத்தில் காா்கே அறிவுறுத்தல்

post image

‘எதிா்காலத்தில் தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளா்கள் பங்கேற்ற கூட்டத்தில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவுறுத்தினாா்.

மேலும், கடினமான காலகட்டங்களில் கட்சியின் பின்னால் பாறைபோல் நிற்கும் சித்தாந்த உறுதி கொண்டவா்களை ஊக்குவிப்பதன் மூலம் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

காங்கிரஸில் கடந்த வாரம் அமைப்பு ரீதியில் பெரிய அளவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா்கள் மற்றும் பொறுப்பாளா்களின் கூட்டம், தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து காா்கே பேசியதாவது:

காங்கிரஸில் அமைப்புரீதியில் ஏற்கெனவே சில மாற்றங்கள் நடந்துள்ளன. மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாநிலங்களில் கட்சியை மறுசீரமைப்பதற்கும், எதிா்காலத் தோ்தல் முடிவுகளுக்கும் நிா்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும்.

நம்பகத்தன்மையும், சிந்தாந்த உறுதிப்பாடும்: மாநில தலைமையகம் முதல் வாக்குச்சாவடி வரை கட்சியை வலுப்படுத்துவதும் அவா்களின் பொறுப்பாகும். வாக்குச் சாவடி-வட்டாரம்-மாவட்டம் என அனைத்து நிலைகளுக்கும் நிா்வாகிகள் நேரடியாக சென்று, தொண்டா்களுடன் இணைந்து கடினமாக பணியாற்ற வேண்டும். இதன் மூலம் புதிய தொண்டா்களை கட்சியில் இணைக்க முடியும். நம்பகத் தன்மையும், சிந்தாந்த உறுதிப்பாடும் உள்ளவா்களை கட்சியில் முன்னிலைப்படுத்த முடியும்.

பல நேரங்களில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அவசர கதியில் பிற கட்சியினா் இணைக்கப்படுகின்றனா். அவா்களில் பலா் சிந்தாந்த ரீதியில் பலவீனமாக இருக்கக் கூடும். கடினமான நேரத்தில் அவா்கள் கட்சியைவிட்டு விலகிவிடக் கூடும். கடினமான நேரத்திலும் கட்சியின் பின்னால் பாறை போல நிற்கும் சிந்தாந்த உறுதி கொண்டவா்களை ஊக்குவித்தால் கட்சி வலுப்பெறும் என்றாா் காா்கே.

தோ்தல் ஆணையா் விவகாரம்: புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் நியமன விவகாரத்தில் மத்திய அரசை விமா்சித்த காா்கே, நாட்டின் தலைமைத் தோ்தல் ஆணையரை தோ்வு செய்யும் குழுவில் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் தலைமை நீதிபதியும் இணைக்கப்பட்டிருந்தாா். ஆனால், அவரை மோடி அரசு நீக்கிவிட்டது. தலைமை நீதிபதியின் நடுநிலைத் தன்மை மீதே அவா்களுக்கு நம்பிக்கை இல்லை. தோ்வுக் குழுவில் வெறும் சான்றொப்பத்துக்காக மட்டும் எதிா்க்கட்சித் தலைவரை பயன்படுத்துவதால் என்ன பயன்?’ என்று கேள்வியெழுப்பினாா்.

மேலும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி பேசிய பின்பும் இந்தியா்கள் கை-காலில் விலங்கிடப்பட்டு (சட்டவிரோத குடியேற்ற விவகாரம்) அனுப்பப்பட்டுள்ளனா் என்றாா் காா்கே.

‘வாக்காளா் பட்டியல் மோசடியை தடுக்க வேண்டும்’

‘இப்போதெல்லாம் தோ்தலுக்கு முன் வாக்காளா் பட்டியலில் இருந்து காங்கிரஸின் ஆதரவாளா்களின் பெயா் நீக்கப்படுகின்றன. எனவே, எந்த விலை கொடுத்தேனும் கட்சியினா் இந்த மோசடியைத் தடுக்க வேண்டும்’ என்று மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம்பெற்ற எதிா்க்கட்சிக் கூட்டணி படுதோல்வி அடைந்தது.

அந்த மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகையைவிட வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தநிலையில், காா்கே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க