செய்திகள் :

தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

post image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், உரிய அனுமதிச் சீட்டு பெற்ற 550 படகுகளுடன் கச்சத்தீவு அருகே சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, கடலில் மீன்பிடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனுஷ்கோடிக்கும், வடக்கு மன்னார் கடற்பரப்புக்கும் இடையே கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 32 பேரையும் கைது செய்தனர். அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழக மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது, கைது செய்யபப்படும் மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது தவிர மீனவர்கள் மீதான தாக்குதல், துப்பாக்கிச் சூடு, இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களும் தமிழக மீனவர்களுக்கு பெருந்துயராக இருந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 365 மீன்பிடி படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கிவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டுதான் வருகிறார். இருப்பினும், எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாய் தெரியவில்லை என்று மீனவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர்... மேலும் பார்க்க

வழக்கறிஞர் திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத் துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்சூட்டிய முதல்வர்!

கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழை!

தமிழகத்தில் பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

நாம் அளவோடு பெற்றதால்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அவர் ... மேலும் பார்க்க

தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை!

தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றின் மீது உ... மேலும் பார்க்க