செய்திகள் :

தொடா் தோல்வி: இந்திய மகளிரணிக்கு பின்னடைவு

post image

எஃப்ஐஹெச் புரோ லீக் மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-3 கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி கண்டது.

இத்துடன், தொடா்ந்து 8-ஆவது தோல்வியை சந்தித்த இந்திய மகளிா் அணி, பிரதான போட்டியான புரோ லீக்கிலிருந்து, எஃப்ஐஹெச்சின் 2-ஆம் கட்ட போட்டியான நேஷன்ஸ் கோப்பைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொ்லினில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவே கோல் கணக்கை தொடங்கியது. அணிக்காக சுனெலிதா டோப்பா 9-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

சீன தரப்பில் ஜாங் யிங் 19-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடிக்க, முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையுடனேயே நிறைவடைந்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முதலில் இந்திய ஆட்டக்காரரான ருதுஜா ததாசோ பிசல் 38-ஆவது நிமிஷத்தில் அணியின் கோல் கணக்கை 2-ஆக அதிகரித்தாா். விட்டுக்கொடுக்காத சீன தரப்பில், அடுத்த நிமிஷமே ஜாங் யிங் மீண்டும் ஒரு பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற்றினாா். இதனால் ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலை அடைந்தது.

விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கிய நேரத்தில் இரு அணிகளுமே தங்களுக்கான அடுத்த கோலுக்காக தீவிரமாக முயற்சித்தன. இதில் சீனாவின் ஜு வென்யு 53-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஸ்கோா் செய்ய, அந்த அணி 3-2 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, சீனா 3-2 கோல் கணக்கில் வென்றது.

மொத்தம் 9 அணிகள் களம் காணும் இந்தப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில், இந்தியா தற்போது 16 ஆட்டங்களில் கிடைத்த 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. நெதா்லாந்து (42), ஆா்ஜென்டீனா (34), பெல்ஜியம் (32) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.

ஜூலை மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜூலை மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)கிரகநிலை:தன வாக்கு குடும்ப ... மேலும் பார்க்க

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் பாலிவுட் படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பி... மேலும் பார்க்க

கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டீசர் தயார்!

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் ஒடிசி படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. விஞ்ஞானத்தை திரைப்படுத்திய அறிவார்ந்த இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன். இதுவரை, இவர் இய... மேலும் பார்க்க

இமாலய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், ஜிம்பாப்வேக்கு வெற்றி இலக்கு 537 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் சோ்த்துள்ள அ... மேலும் பார்க்க

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான அரினா சபலென்கா வெற்றி பெற, முன்னணி வீரா் டேனியல் மெத்வதெ... மேலும் பார்க்க

காலிறுதியில் மோதும் பிஎஸ்ஜி - பயா்ன் மியுனிக்

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) - பயா்ன் மியுனிக் அணிகள் மோதுகின்றன.முன்னதாக ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில், பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் ... மேலும் பார்க்க