செய்திகள் :

ஹிமாசல் மேகவெடிப்பு: கனமழை, வெள்ளத்தால் ஒருவர் பலி! 12 பேர் மாயம்!

post image

ஹிமாசல பிரதேசத்தில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதில் ஒருவர் பலியானதுடன், 12 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மண்டி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) மாலை முதல் சுமார் 216.8 மி.மீ. அளவிலான மழை பெய்திருப்பது பதிவாகியுள்ளது. இதையடுத்து, அம்மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், கர்சோக் பகுதியில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 12-13 பேர் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், சையாஞ்சு பகுதியில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் மாயமானதாகத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் ஏராளமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மண்டி மாவட்டத்தின் ஏராளமான கால்நடைகள், வாகனங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், அங்குள்ள பல கிராமங்களின் வீடுகள் மற்றும் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், மாவட்டத்தின் அனைத்து ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், பண்டோஹ் அணையின் நீர்மட்டம் 2,922 அடிக்கு உயர்ந்துள்ளதால், அணையிலிருந்து பியேஸ் ஆற்றுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மண்டி மற்றும் ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இன்று (ஜூலை 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தின் சம்பா, ஹமிர்பூர், மண்டி, ஷிம்லா, சிர்மவூர் மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்களுக்கு, வானிலை ஆயுவு மையம் அடுத்த 24 மணிநேரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Himachal cloudburst: One dead, 12 missing due to heavy rain and flooding!

இதையும் படிக்க: மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

டி.கே. சிவக்குமாரை முதல்வராக்கவில்லை என்றால்... கர்நாடக எம்எல்ஏவின் பரபரப்பு பேட்டி!

கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து துணை முதல்வர் சிவக்குமாரின் ஆதரவாளரும் ராமநகர் எம்.எல்.ஏ.வுமான இக்பால் உசேன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்ச... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் முயற்சியில் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்: பிரதமர்

டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளமான லிங்கட்இனில் பதிவு ஒன்ற... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: 42 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டைய... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர்... மேலும் பார்க்க

ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பருமழை தொடங்கியது முதல்,... மேலும் பார்க்க

தெலங்கானா பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் நியமனம்!

தெலங்கானா மாநிலப் பிரிவின் தலைவராக என். ராம்சந்தர் ராவை பாஜகவின் தேசியத் தலைமை நியமித்துள்ளதாகக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், த... மேலும் பார்க்க