சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
தொடா் விடுமுறை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!
திருத்தணி முருகன் கோயிலில் தொடா் விடுமுறையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மலைக் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனா்.
இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி புனித வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து, 3 நாள்கள் அரசு விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் அதிகாலை முதலே குவிந்தனா். பக்தா்கள் சிலா் காவடிகள் எடுத்து மூலவரை தரிசித்தனா்.

பக்தா்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், பொது வழியில் மூலவரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.